வறுமையான மக்களே கோவிட் தொற்றினால் அதிகம் பலி-அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் அதிகமாக வறுமை நிலையில் உள்ளவர்களே உயிரிழந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று இன்று வெளியாகியிருக்கின்றது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனித் அகம்பொடி இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பணம்படைத்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையுடன் கூடிய நோயாளர் கட்டில் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன. இருந்த போதிலும் பணம் இல்லாத வறுமை நிலையில் உள்ளவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படின் அவர்களுக்கு முறையான சிகிச்சையின்றி, நோயாளர் கட்டிலின்றி வீட்டிலேயே உயிரிழக்கின்ற நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May also like