ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

நாட்டை உடனடியாக ஒருவாரத்திற்கேனும் முடக்கும்படி அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதிக்கு அவர்கள் இன்று பகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மிகவேகமாகப் பரவிவருவதால் நாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்திவருவதாகவும், தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்து வருவதாகவும் அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

You May also like