கோவிட் இன்னும் சமூகமயமாகவில்லையாம்? மீண்டும் கூறுகிறார் டாக்டர் ஹேமந்த!

நாட்டில் கொரோனா தொற்று சமூகமயப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான டாக்டர் ஹேமந்த ஹேரத்  மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்த காரணத்திற்காக இரண்டு முறை தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று ஊடகங்களுக்கு முன்பாக கருத்து வெளியிட்டபோது மேற்கண்டவாறு கூறினார்.

எவ்வாறாயினும் சமூகத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியில் தொற்று சமூகமயப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

You May also like