தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும் கொரோனா!

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரான சமன் ஸ்ரீ ரத்நாயக்கவுக்கும் அவரது குடும்பத்திலுள்ள சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு ஆணைக்குழுக் கட்டிடத் தொகுதியில் பணியாற்றுகிற இருவருக்கு தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவின் பிரதான அலுவலகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May also like