கொழும்புக்கு வெளியே செல்லாத டெல்டா- மேலும் திரிபுகள் உள்ளதா?ஆய்வுகள் தீவிரம்!

டெல்டா திரிபடைந்த தொற்று நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பரவத் தொடங்கவில்லை என்ற தகவலை கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளியே டெல்டா தொற்று பரவியிருக்கின்றதா என்பது பற்றி ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டு வருகின்ற தொற்றாளர்களில் 90 வீதமானவர்களுக்கு டெல்டா தொற்று இருப்பது இனங்காணப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, டெல்டா தொற்றிலிருந்து திரிபடைந்த வேறு தொற்றுக்கள் பரவியிருக்கின்றதா என்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May also like