ஒவ்வொரு வீட்டிலும் கோவிட் நோயாளர்கள் உருவாகும் அபாயம் நெருங்குகிறது!!!

நாட்டின் அனைத்து வீடுகளிலும் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படக்கூய அபாயகட்டம் நெருங்கி வருவதாக அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கின்றது.

அரசாங்கத்தினால் நேற்றும் அதேபோல திருத்தியமைக்கப்பட்ட நிலையில் இன்றும் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் அறிக்கை பிரயோசனமற்றதாகும் என்று அந்த சங்கத்தின் தலைவரான டாக்டர் நிஷாந்த தஸநாயக்க ஊடகமொன்றுக்கு இன்று வியாழக்கிழமை முற்பகல் கருத்து வெளியிட்டபோது கூறியுள்ளார்.

தடுப்பூசியேற்றல் பணிகள் இந்த நாட்டிற்குள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டதாகவும், முறையான மற்றும் தகுதியான ரீதியில் அப்பணிகள் இடம்பெறுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

You May also like