தலிபான்களுக்கு ஆதரவுப் படையா? கோவையில் அதிரடி சோதனை!

இந்தியாவின், கோவையில் தலிபான் ஆதரவு நபர்களின் சமூகவலைதள கணக்குகளை என்.ஐ.ஏ., மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் உன்னிப்பாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதை இந்தியாவில் சிலர் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்திலும் தலிபான்களுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருவதாக தமிழக உளவுத்துறை, மத்திய உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது. 

தமிழகத்தில் குறிப்பிட்ட, ஐந்து வலைதள கணக்குகளை உளவுத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். கோவையிலும் ஒரு சிலரின் சமூகவலைதள பதிவுகளை சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

கோவையில் ஏற்கனவே ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையிட்டு மடிக்கணினி, இருவட்டுக்கள் என்பவற்றைக் கைப்பற்றிருந்ததோடு, கேரளா மற்றும் கோவையில் ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like