பஸில் – விமல் திடீர் சந்திப்பு: அடுத்த திருப்பம் ஏற்படுமோ?

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையே திடீர் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக பஸில் தரப்பு தகவல்கள் Tamil.Truenews.lk செய்திகளுக்குத் தெரிவித்தன.

நிதியமைச்சரினால் இந்த சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், அந்த அழைப்பை ஏற்ற விமல் வீரவன்ச தனியே சென்று சந்திப்பை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் விமல் வீரவன்சவின் கருத்தை நிதியமைச்சர் இச்சந்திப்பில் பெற்றுக்கொண்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நடப்பு அரசியல் பற்றியும் இங்கு கவனஞ்செலுத்தப்பட்டதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

 

You May also like