புதிய அமைச்சிற்கு செல்வதை தவிர்த்த பவித்ரா; காரணம் இதுதான்!

போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட பவித்ரா வன்னியாராச்சி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது கணவரான காஞ்சன கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் அவரும், அவரது மனைவியான அமைச்சர் பவித்ராவும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் பவித்ரா, Zoom தொழில்நுட்ப வசதியுடன் அமைச்சிற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கடமைகளை பொறுப்பேற்றார் என்றும் கூறப்படுகிறது.

You May also like