பவித்ராவின் கணவருக்கு தொற்று உறுதி-மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போது போக்குவரத்து அமைச்சராக பதவிவகிப்பவருமான பவித்ரா வன்னியாராச்சியின் கணவராகிய காஞ்சன ஜயரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சன ஜயசேகர சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதோடு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தனிப்பட்ட செயலாளரும்கூட.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like