05 கோடி ரூபா போதைப்பொருளுடன் யாழ் கடலில் வைத்து மூவர் கைது

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு கடற்பரப்பில் வைத்து 05 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் நேற்று நள்ளிரவு குறித்த கடற்பரப்பில் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது, கடற்கரையை நோக்கிவந்த படகை நிறுத்தி சோதனை செய்தில் அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 168 கிலோ 750 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதில் பயணித்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் இப்பைத்தீவு கடற்பரப்பில் வைத்து உள்நாட்டுப் படகொன்றை சோதனை செய்த இலங்கை கடற்படையினரால் 650 கிலோ கிராம் எடைகொண்ட காய்ந்த மஞ்சள் குற்றிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இவை இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

You May also like