ஒட்சிசன் ஏந்திய சக்தி கப்பல் 23ஆம் திகதி கொழும்புக்கு வரும் (PHOTOS)

கோவிட் நோயாளர்களை உயிர்பிழைக்க வைக்கின்ற ஒட்சிசன் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுக்கு சென்ற இலங்கைக் கடற்படையின் சக்தி என்கின்ற கப்பல் சென்னையிலிருந்து நாடு திரும்ப ஆரம்பித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தக் கப்பல் இந்தியா நோக்கிப் பயணத்தை ஆரம்பித்ததோடு, 18ஆம் திகதி மாலை சென்னை துறைமுகத்தைச் சென்றடைந்தது.

குறித்த கப்பலில் 100 மெட்றிக் தொன் ஒட்சிசன் தொகையிருப்பதாக கூறப்படுகின்றது.

இன்று அதிகாலை விஷாகா பட்டணத்திலிருந்து நாடு திரும்ப ஆரம்பித்த சக்தி கப்பல், வருகின்ற 23ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இந்திய கடற்படைத்தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்குடன் நேரடியாக நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து சக்தி கப்பல் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May also like