LOCKDOWN இல்லையா? ஜனாதிபதி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை!

நாட்டை ஒருவாரத்திற்காவது மூடும்படி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

அவ்வாறு பொதுமுடக்கம் ஒன்றை அறிவித்தால் அன்றாடம் வருமானம் பெற்றுவருவோர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நாட்டை மூடுவதற்கான தீர்மானத்தை பெரும்பாலும் ஜனாதிபதி எடுக்கமாட்டார் என்றே அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும் தனது முடிவினை ஜனாதிபதி கோட்டாபய இன்று மாலை விசேட அறிவிப்பொன்றை விடுத்து வெளியிடவுள்ளார்.

தொடர்ந்து நாளை காலையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிபெறவுள்ள ஜனாதிபதி, தனது முடிவிற்கான விளக்கத்தையும் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like