பொறுமையாக இருங்கள்- விசேட உரையில் ஜனாதிபதி வேண்டுகோள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.

அதில், நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்லஎன்று கூறினார்.

இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்றும் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்லவென்பது தெளிவாகிறது. எனவே நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள் எனவும் குறிப்பிட்டார்.

You May also like