பிடிவாதமாக இருந்த ஜனாதிபதி LOCKDOWNக்கு எப்படி இணங்கினார்? இதோ வந்தது உண்மை!

நாட்டை முடக்கும்படி சமூக ரீதியில் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த போதிலும் நாட்டை மூடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படி இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்க அனுமதித்தார் என்பதன் பின்னணி தற்போது வெளிவந்துள்ளது.

எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் என பலரும் நாட்டை ஒருவாரத்திற்காவது முடக்கும்படி கோரிக்கை விடுத்துவந்தனர்.

நாட்டை முடக்கமாட்டேன் என நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் அழுத்தத்திற்கு மத்தியில் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் இறுதியில் மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பிவைத்ததால் 10 நாட்களுக்கு நாட்டை முடக்கஜனாதிபதி தீர்மானம் கொண்டார்.

இதன் பின்னணி பற்றி Tamil.truenews,lk தீவிரமாக ஆராய்ந்ததில் சம்பகமாக தகவல் ஒன்று கிடைத்தது.

நாட்டை முடக்கும்படியாக எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து அந்தக் கோரிக்கையை அரசாங்கம் செய்ததுபோல அல்லாமல் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளினைப் பெற்று அதற்கமைய நாட்டை முடக்கலாம் என்று மேல் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மகாநாயக்க தேரர்களின் கடிதத்தை தயார்செய்ய கோரிக்கை விடுக்க வேண்டும். அதற்கான முழுப்பொறுப்பையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவே சொல்லப்படுகின்றது.

இறுதியில் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளினையடுத்தே நாடு தற்போது மூடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like