54000 பேர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 183 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 ஆயிரத்து 884 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 84 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 ஆயிரத்து 580 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 54 ஆயிரத்து 22 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May also like