இந்தியாவுக்கு நன்றி கூறிய இலங்கை கடற்படை-ஷக்தி கப்பலுக்கும் வரவேற்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்காக இந்தியாவிடத்தில் கோரப்பட்ட ஒருதொகை ஒட்சிசன் இலங்கைக்குக்கிடைத்திருக்கின்றது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஒட்சிசனை பெற்று இலங்கைக்குத் திரும்பிய ஷக்தி கடற்படைக் கப்பலை பார்வையிடுவதற்காக இன்று திங்கட்கிழமை இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன களவிஜயத்தை செய்தார்.

சுமார் 100 மெற்றிக் டொன் ஒட்சிசன் இந்தியாவிடத்திலிருந்து இலங்கைக்குக் கிடைத்திருக்கிறது.

இதற்படி இன்று முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படையின் ஷக்தி கப்பலை பார்வையிட இலங்கைக் கடற்படை சென்ற சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கைக்கு உதவிய சந்தர்ப்பத்தை நினைவுகூர்ந்த இலங்கை கடற்படைத்தளபதி, இதன்போது இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கைக் கடற்படையின் சம்பிரதாயத்திற்கு அமைவான ஷக்தி கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு இந்திய உயர்ஸ்தானிகருக்கும் சிறப்பு வரவேற்பை இலங்கைக் கடற்படையினர் வழங்கினார்கள்.

????????????????????????????????????

You May also like