தீவிர சிகிச்சைப் பிரிவில் தேர்தல்கள் ஆணையாளர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தற்போது கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக்கு இலக்காகிய அவர் இதற்கு முன் கண்டியிலுள்ள தனது இல்லத்தில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் சுகயீனம் உக்கிரமடைந்த காரணத்தினால் அவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்சமயம் கொழும்பு கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியிலுள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல அவருக்கு ஒட்சிசன் வசதியும் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

 

You May also like