சிறை மருத்துவரை மிரட்டிய ரிஷாட்?

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியரை மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உதவி பொலிஸ் பரிசோதகரின் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நோயாளர்களை பரிசோதனை செய்யும் வைத்திய அறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like