மஸ்கெலியா நபர் கொழும்பில் சடலமாக மீட்பு!

கொழும்பு – கொள்ளுப்பிட்டி 14ஆவது குறுக்கு வீதிக்கு அருகே கடற்கரையில் ஒருவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தனியார் பாதுகாப்புச் சேவை உத்தியோகத்தராக தொழில்புரிந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் PCR மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

You May also like