இலங்கைக்கு அருகே பாரிய நிலநடுக்கம்!

யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட 5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்ப்டடுள்ளது.

இருப்பினும் இங்கைக்குப் பாதிப்பில்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12.35 மணியளவில் இந்த நிலநடுக்கம் தமது நில அதிர்வு கண்காணிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம், இதனால் நாட்டுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

You May also like