ஊரடங்கு மத்தியிலும் கொழும்பு நகரிற்குள் அதிகளவு வாகனங்கள் பிரவேசம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்றைய தினத்திலும் கொழும்பு நகரிற்குள் அதிகளவான வாகனங்கள் பிரவேசித்ததை அவதானிக்க முடிகிறது.

இதனால் கொழும்பு – நீர்கொழும்பு வீதி, காலி பிரதான வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வாகன நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்று மேலும் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி இதுவரை மொத்தமாக 57435 பேர் கைதாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May also like