ஈஸ்டர் தாக்குதல்-மகாநாயக்க தேரரை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை?

சியாம் பீடத்தின் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை அண்மையில் சந்தித்த பொலிஸ் உயரதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல் பற்றி கருத்து வெளியிட்டமை குறித்து விசாரணைகளை நடத்தும்படி கத்தோலிக்க சபை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய கத்தோலிக்க சபையின் தொடர்பாடல் மத்திய நிலையப் பணிப்பாளரும். குரண புனித தேவாலயத்தின் அருட்தந்தையுமான சிரில் காமினி பெர்ணான்டோ இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்தும் கடமைகளைக் கொண்ட பொலிஸ் உயரதிகாரிகள், கடமை சீருடையில் சென்று இவ்வாறு முன்வைத்திருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்ற விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட சிலர் அண்மையில் அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஈஸ்டர் தாக்குதல் பற்றி பரபரப்பு விடயங்களைப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like