மங்கள இறுதியாக தொலைபேசியில் பேசிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தாம் நேற்று பகல் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவரது சுகதுக்கங்களைக் கேட்டறிந்ததாக குறிப்பிட்ட அவர், இன்று காலை மங்கள சமரவீரவின் மறைவையடுத்து அதிர்ச்சிக்குள்ளாகியதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பையடுத்து வெளியிட்டுள்ள சோகச் செய்தியில் ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

மிகவிரைவில் மங்கள சமரவீர குணமடைந்து திரும்புவார் என தாம் எதிர்பார்த்த போதிலும் அந்த எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்ததாகவும் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

You May also like