யானைக் கட்சியின் பவள விழாவின் பிரசாரப் பணி ஐக்கிய மக்கள் சக்தி வசம்?

2021 செப்டம்பர் 05ஆம் திகதி நடக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 75ஆவது நிறைவாண்டு (பவள விழா) ஏற்பாட்டுப் பணி மற்றும் பிரசாரப் பணிகள் எதிர்கட்சித்தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக “சிறிகொத்த” உள்ளகத் தகவல்கள் எமது “Tamil.Truenews.lk” செய்திகளுக்குத் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சஜித் பிரேமதாஸவின் நண்பராக உள்ள “Ants Work” தனியார் பிரசார நிறுவனத்தின் உரிமையாளராகிய சாலிய வீரசேகரவுக்கு இந்தப் பிரசாரப்பணிகளை நடத்துவதற்காக 10 இலட்சம் ரூபா வரை சாகல காரியவசம் வழங்கியிருப்பதாக தகவல்.

“Ants Work” தனியார் நிறுவனத்தின் பிரதானி சாலிய வீரசேகரவின் அரசியல் நிலைப்பாடானது ரணில்  விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக்கட்சியின் ஆலோசகராக இருந்துகொண்டு தலைமைப் பொறுப்பினை சஜித் பிரேமதாஸவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் பதவியை பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் அளிப்பதேயாகும்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் உபத்தலைவர் அக்கிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டவர்கள் மீது கடும் விமர்சனத்தை உடையவராகிய சாலிய வீரசேகர, தனது நெருக்கமான சிலருடன் கலந்துரையாடியபோது, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனி எதிர்காலமே இல்லை என்ற கருத்தாடலைக் கூறியிருக்கின்றார்.

இந்த அனைத்து விடயங்கள் பற்றியும் “சிறிகொத்த” உள்ளகத் தகவல்கள் எமது “Tamil.Truenews.lk” செய்தி இணையத்தளத்துடன் தொடர்புகொண்டு பேசியபோது, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் புதிய அதிகாரிகள் பணிக்குழாமுடன் எதிர்ப்பினை சம்பாதித்துள்ள சாகல காரியவசம், சஜித் பிரேமதாஸ வாதிகளுடன் இணைந்து சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகத்தையும் போட்டுடைத்துள்ளன.

You May also like