ஆப்கானில் இருந்து 19 இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு

ஆப்கானிஸ்தான் மோதலுக்கு மத்தியில் சிக்கித்தவித்த இலங்கைப் பிரஜைகள் 19 பேர் இன்று புதன்கிழமை நாடு திரும்பினர்.

ஆப்கான் நெருக்கடியில் இதுவரை 92 இலங்கையர்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர்.

எவ்வாறாயினும் அவர்களில் 26 பேர் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் இருப்பதற்கு விருப்பம் வெளியிட்டிருக்கின்றனர் என சொல்லப்படுகிறது.

இதேவேளை இந்த 19 பேரைத் தவிர மேலும் 06 இலங்கையர்கள் இந்தியா வழியாக நாடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like