மங்களவின் மரணத்தை முன்கூட்டியே குறித்த பெண் பிக்கு

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று மரணமடைந்த நிலையில், இலங்கையில் முக்கிய பிரமுகர் ஒருவர் விரைவில் மரணிக்கவுள்ளார் என்று எதிர்வுகூறலை வெளியிட்ட பெண் பௌத்த பிக்கு ஒருவரது காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி – பல்லேகலையிலுள்ள கோதமி விகாரையின் பிரதான பெண் பிக்குவாகிய கம்மட்டாச்சாரி கோதமீ தேரர் கடந்த ஜுலை மாதம் 03ஆம் திகதி சமூக வலைத்தளமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலில் பங்கேற்றிருந்தார்.

அதன்போது, கருத்து வெளியிட்டிருந்த அவர், “இலங்கையில் அனைவராலும் அறியப்பட்ட பிரபல அரசியல்வாதி மரணிக்கப்போகின்றார். அவர் அரசியலுக்கு ஆற்றிய சேவை மதிக்கத்தக்கது. உலகமும் அவர்பற்றி பேசும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப்பற்றியே ஆருடம் வெளியிட்டிருந்ததாக பலரும் கூறுகின்றனர்.

You May also like