சந்திரிகா கைது…!!!

பல பகுதிகளில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் களனி பகுதியில் வசிக்கும் சந்திரிகா என்ற 52 வயதுடையய பெண் ஆவார்.

கைதின்போது அவரிடமிருந்து 11 கிரோம் ஹெரோயின், 2.6 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, அவர் கிரிபத்கொடை, றாகம மற்றும் களனி பகுதிகளில் நீண்ட காலமாக ஹெராயின் விநியோகித்து வந்தது தெரியவந்தது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் கிரிபத்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

You May also like