அஜித் ரோஹனவின் தற்போதைய நிலைமை இதுதான்! திடீரென மாற்றப்பட்டார்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

அவர் நேற்றைய தினம் மாலை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

ஆயினும் அவரது நிலை மோசமானதாக இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அவர் சாதாரண வார்ட் அறைக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல் கூறுகின்றது.

குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like