வீட்டில் விளையாடிய நிலையில் விழுந்து உயிரிழந்த 3 வயது குழந்தை-கொரோனா உறுதி!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த 03 வயதாயான குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியான சம்பவம் இரத்தினபுரி மாவட்டம் பலங்கொடை – மாரதென்ன என்கினற் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

விக்னேஸ்வரன் வருஷிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்திருப்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கீழே விழுந்த குழந்தையை பெற்றோர் உடனடியாக பலங்கொடை தள வைத்தியசாலையில் சேர்த்தபோது உயிரிழந்துவிட்டது. பின்னர் நடததப்பட்ட பரிசோதனையில் கோவிட் உறுதியாகியது.

 

You May also like