அர்ஜுனவிடம் ஐ.தே.கவை ஒப்படைக்குமாறு ரணிலிடம் சிரேஸ்ட தலைவர்கள் கோரிக்கை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அப்பதவிக்கு அர்ஜுன ரணதுங்கவை நியமிக்கும்படி அக்கட்சியின் சிரேஸ்டத் தலைவர்கள் பலரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கள – பௌத்த தலைவரான அர்ஜுன ரணதுங்க நாட்டின் பெருமையை சர்வதேச அளவில் கொண்டுசென்றதோடு நாட்டையும் உலகப் புகழ்பெற வைத்த பிரபலமான கிரிக்கெட் வீரராகத் திகழ்கின்றார் என்பதோடு அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசியல் ரீதியாகவும் மிகுந்த அவசியமான ஒருவராக இனங்காணப்படுகின்றார் என்பதையும் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களால் விடுக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைக்குப் பின்னணியானது, வஜித அபேவர்தனவுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிராகரிப்பு நிலைமை, அவருக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையே காணப்படகின்ற திரைமறைவிலான கொடுக்கல் வாங்கல், ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளக ரீதியிலும் அவருக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கள் என்பவற்றையும் சிரேஸ்ட தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்குப் பிரதான காரணம், அவன்காட் நிறுவன உரிமையாளர் நிஸ்ஸங்க சேனாதிபதி நல்லாட்சியின் காலத்தில் தலைமறைவாக இருக்க தனது இல்லத்தை வழங்கியமை, அவரிடமிருந்து கட்சியின் தேவைக்காக பணம் கரந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் வஜிர அபேவர்தன மீது முன்வைக்கப்ப்டடுள்ளன என்று கூறப்படுகின்றது.

எனினும் இந்தக் கோரிக்கைக்கு ரணில் விக்கிரமசிங்க இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May also like