விமல் அணி உறுப்பினரிடம் இருந்து பதவியை பறித்த மஹிந்த!

ஆளுங்கட்சி உதவி அமைப்பாளர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான பிரமித்த பண்டார தென்னகோனுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இதுகுறித்த நியமனக் கடிதம் இன்று வியாழக்கிழமை அவருக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பதவியில் நேற்றுவரை பொதுஜன கட்சியின் பிரதிநிதியான அஸங்க நவரத்ன இருந்துவந்தார்.

அவர் கடந்த சில நாட்களாக அரசாங்கத்திற்குள் புரட்சி செய்கின்ற குழுவில் இருப்பதால் அப்பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

You May also like