கத்தோலிக்க சபை உறுப்பினர் மீது இன்றும் சிஐடி விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, கருத்து வெளியிட்ட ஷேஷான் மாலக்க கமகே, இரண்டாவது நாளாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஷேஷான் மாலகே கமகே, நேற்றைய தினம் (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது நாளாகவும் ஷேஷான் மாலகே கமகே விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (26) முற்பகல் 9:30 க்கு தனது சட்டத்தரணிகள் மற்றும் அருட்தந்தைகளுடன், ஷேஷான் மாலகே கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சில ஆவணங்களுடன், அவர் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

You May also like