கொரோனா என்பது காய்ச்சல், தடிமன் போன்றது-எஸ்.பி

கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய வேண்டாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்று என்பது காய்ச்சல், தடிமன் போன்றது என்றும் அவர் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது கூறினார்.

வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 81 வீதமானவர்கள் சுகமடைவதாகவும், 14 வீதமானவர்களுக்கு தடிமன் போன்றன ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரண வீதமானது 1.9 வீதமாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

You May also like