தடுப்பூசிக்காக காத்திருந்தவர்கள் இடையே கடும் மோதல்

புத்தளம் – ஆனமடுவ கன்னங்கரா வித்தியாலயத்தில் தடுப்பூசிக்காக காத்திருந்தவர்கள் இடையே நேற்று இரவு கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த இடத்தில் கோவிட் தடுப்பூசி அளிக்கப்பட்டு மிகுதியான தடுப்பூசி 30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காகக் காத்திருந்தவர்கள் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது.

சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

You May also like