4 கோடி ரூபா மதிப்புள்ள கேரளா கஞ்சாவுடன் யாழில் இருவர் சிக்கினர்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மணற்காடு கரையோரப் பிரதேசத்தில் இலங்கை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்திய சோதனை நடவடிக்கையில் 139 கிலோ  930 கிராம் உடைகொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவற்றை இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்திவந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவிக்கின்றது.

அத்துடன் இவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி 4 கோடியே 10 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

You May also like