டெலிவரி தொழில் செய்யும் ஆப்கான் முன்னாள் அமைச்சர் 

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தொடர்பாடல் அமைச்சராக இருந்த சைட் சதாத் தற்போது பொருட்களை வீடுவீடாகச் சென்று டெலிவரி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

கடந்த செப்டம்பரில் ஜேர்மன் சென்ற இவர் அங்கு இவ்வாறான தொழிலை தெரிவுசெய்துகொண்டார்.

தாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊழல் மோசடி செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றும் மக்களுக்குத்தான் தாம் சேவை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like