ஊரடங்கு செப்டம்பர் 6ம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற கொவிட் – 19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like