விண்ணைத் தொடும் சீனி விலை;இன்று முக்கிய பேச்சு!

ஒருவார காலப்பகுதிக்குள் ஒரு கிலோ கிராம் சீனி 50 ரூபாவால் உயர்வடைந்துள்ளது தற்போது 210 ரூபாவாக காணப்படுகிறது.

இவ்வாறு சீனியின் விலை சடுதியான அதிகரித்துள்ளதால் நுகர்வோர் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றைய தினம் நிதியமைச்சருக்கும், வர்த்தகத்துறை அமைச்சருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டடிருந்தது.

இந்த நிலையில், சீனி விலை 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குற்றம் சுமத்தியிருந்தார்.

டொலர் விலை அதிகரிப்பதை காரணம் காட்டி வர்த்தகர்களினால் சீனி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய சட்டத்திட்டங்களில் சில குறைப்பாடுகள் உள்ளன.

இதனால் தமது தரப்பினால் எந்தவித சட்ட நடவடிக்கையினையும் மேற்கொள்ள முடியாதுள்ளது.

எனவே, அது தொடர்பிலான சட்டமூலத்தினை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருந்தார்.

You May also like