கன்னத்தில் அறை வாங்கினேனா? இராஜ் பதில்-அரசு மீதும் விமர்சனம்

தன்னை யாரும் கன்னத்தில் அறையவில்லை என்று பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவிக்கின்றார்.

இதுபோன்ற போலிப் பிரசாரங்களை ஜே.வி.பியினரே மேற்கொண்டு வருவதாகவும் அவர் சமூக வலைத்தளமொன்றில் நடந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது இசைப்பயணத்தை வலுப்படுத்தவே பதவிகளிலிருந்து விலகி ஓய்வுபெற்றிருப்பதாகவும் இராஜ் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மேலும் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“காரணம், இன்று பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் அதற்கு சரிவர பின்பற்றவில்லை. இதனால் கடுமையான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் எடுக்கின்ற சில தீர்மானங்கள் குறித்து நான் அதிருப்தி கொள்கின்றேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May also like