2000 ரூபா பணம் வழங்கும்போது ஹட்டனில் மோதல்

ஹட்டன் – டிக்கோயா பிரதேசத்தில் 2000 ரூபா நிவாரணப் பணம் அளிக்கின்ற பணி இன்று நடைபெற்றபோது மோதல் சம்பவமும் பதிவாகியுள்ளது.

டிக்கோயா 319 கிராம சேவகப் பிரிவில் இந்துக் கோவிலுக்கு அருகே இன்று 2000 ரூபா நிவாரணப் பணம் வழங்கும் நிகழ்வு நடந்தது.

எனினும் பட்டியலில் இல்லாதவர்களும் அந்த இடத்திற்கு வந்ததினால் குழப்பநிலை ஏற்பட்டதோடு மோதல் சம்பவமும் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like