மேலும் 192 கோவிட் மரணங்கள்

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் (28) கொவிட் தொற்றினால் 192 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,775 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று தினங்களாக 200ற்கும் அதிகமான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையில், நேற்றைய தினம் 200ற்கும் குறைவான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

You May also like