அமைச்சர் டலஸ், ஜனாதிபதி செயலாளர் தனிமைப்படுத்தலில்!

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும மற்றும் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர ஆகியோர் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு நேற்று கோவிட் தொற்று உறுதியானது.

அவர் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கோவிட் ஒழிப்பு செயலணியில் கலந்து கொண்டிருந்த நிலையில், அமைச்சருடன் ஊடக அமைச்சர் டலஸ் அலகப்பெரும மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோர் முகக்கவசம் இன்றி தேநீர் அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

You May also like