ஈஸ்டர் தாக்குதல் விசாரணை- கர்தினாலை சந்திக்கிறார் பீரிஸ்

ஈஸ்டர் தாக்குதல் பற்றி அரசாங்கத்தின் செயற்பாடுகளை தெளிவுபடுத்த கொழும்பு பேராயர் கர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை சந்தித்து இதுபற்றி கலந்துரையாடுவதற்கு சந்திப்பிற்கான கோரிக்கையை அவரிடம் முன்வைத்திருக்கின்றேன். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கம் எடுத்த அனைத்து நடவடிக்கை பற்றி தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பிற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளேன். மிகவும் அவதானத்திற்குரிய பதிலை கர்தினால் வழங்கியுள்ளார். கர்தினால் ஆண்டகையின் அலுவலகம், மிகவிரைவில் இந்த சந்திப்பிற்கான சந்தர்ப்பத்தை அளிப்பதாக பதிலளித்துள்ளது. விசேடமாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, சந்தேக நபர்கள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அரசாங்கம் எடுத்துள்ள நவடடிக்கைகள் குறித்துஅவரை தெளிவுபடுத்துவதே எனது இந்த சந்திப்பிற்கான நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

You May also like