கம்பஹாவில் 20000 கோவிட் நோயாளர்கள் வீடுகளில்…!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய 20000ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் வீடுகளிலேயே இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.டி. குலதிலக்க தெரிவிக்கின்றார்.

இவ்வாறு வீடுகளில் இருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தே வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லலாம் என அச்சம் வெளியிட்ட அவர், சுகாதார கட்டமைப்பு கம்பஹா மாவட்டத்தில் வீழும் நிலையும் ஏற்படலாம் என்றும் கூறினார்.

You May also like