ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு; இன்றிரவு முதல் புதிய சட்டம் அமுல்!

அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இதனை அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்குதல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் ஆகியவற்றை தவிர்க்கும் நோக்கில் இந்த அவசர சட்ட விதிமுறைகளை அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்

You May also like