கொரோனா இடையே இலங்கை பௌத்த பிக்குகள் செய்த சாதனை

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதற்காக பௌத்த பிக்குகள் இணைந்து இலங்கையில் புதிய சாதனையொன்றை நிகழ்த்தி வருகின்றனர்.

உலகில் மிக நீண்டமாக பிரித் பிரார்த்தனை நூல் பயன்படுத்தப்படுவதே உலக சாதனையாக அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் இன்றுவரை இதுஉலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குருநாகல் – மாவத்தகம மீதென்வல பிரதேசத்திலுள்ள போதிமலு விகாரை பிக்குகுள் இணைந்து, அருகிலுள்ள ஏனையகிராமங்களையும் இணைத்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பிரார்த்தனை நூலினை ஏற்பாடு செய்தனர்.

பெரும்பாலும் இது உலக சாதனையாகக் கருதப்பட்டு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக குறித்த விகாரையின் பிக்குகள் கூறுகின்றனர்.

You May also like