‘குடி’ மகன்களுக்கு வந்த சோதனை…!!!

180 மில்லிலீட்டர் அளவிலான மதுபான போத்தல்களை தடை செய்யுமாறு புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக, 90 சதவீதமான மக்கள் 180 மில்லிலீட்டர் அளவிலான மதுபான போத்தல்களை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

You May also like