27 எம்.பிக்களுக்கு இதுவரை கோவிட் உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் இதுவரை 27 உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் இறுதியாக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக்க வக்கும்புற மற்றும் அசங்க நவரத்ன ஆகியோருக்கே தொற்று உறுதியாகியது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 95 வீதமானவர்கள் கோவிட் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like