கொரோனா இடையே சிறுவர்களை பலியெடுத்துவரும் புதுவைரஸ்

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சிறுவர்கள் இடையே பரவிவருகின்ற ஒருவகை வைரஸ் காய்ச்சல் காரணமாக வட இந்தியாவின் உத்தர மாநிலத்தில் சிறுவர்கள் பலரும் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தொண்டை வலி, தலைவலி போன்ற சாதாரண காய்ச்சலுக்கு ஏற்படுகின்ற அறிகுறிகளே இந்த புதுவித வைரஸிற்கும் ஏற்படுகின்றது.

மேலதிகமாக கை, கால்களில் ஒருவித அடையாளமும் ஏற்படுகின்றது.

உத்தர மாநிலத்தில் 06 மாவட்டங்களில் குறைந்தது 50 பேர்வரை பலியாகியிருப்பதாகவும், அவர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆக்ரா, மட்டுரா, மீன்புரி, ஏட்டா, கஸ்கன்ஜ், பிரோசாபாத் போன்ற மாவட்டங்களே இவ்வாறு பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

You May also like